ஜெபம் செய்தாவது ஜெயிக்க வைப்போம்... விஜய்-க்கு ஆதரவாக பழங்குடியினர் சூளுரை!

Feb 20, 2024 - 17:09
ஜெபம் செய்தாவது ஜெயிக்க வைப்போம்... விஜய்-க்கு ஆதரவாக பழங்குடியினர் சூளுரை!

ஜெபம் செய்தாவது விஜய்யை ஜெயிக்க வைப்போம் என கல்பாக்கம் அடுத்த ஐந்துகாணி பகுதியை சேர்ந்த இருளர் பெண்மணிகள் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாளில் இருந்து, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் தனது கட்சியின் பெயரை கொண்டு செல்ல நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அனைத்து மாவட்டத்தில் உள்ள தவெக நிர்வாகிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கட்சிப்பெயரை மக்கள் மனதில் பதிய வைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துகாணி இருளர் பகுதியில், தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பில், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்த மூதாட்டிகள், அருகே கட்டப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனரின் முன் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கினர்.

பின்னர் தங்கள் படும் அவலத்தை, மாற்ற விஜய் வர வேண்டும். ஜெபம் செய்தாவது நடிகர் விஜய் வெற்றி பெற செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். நடிகர் விஜய்-க்கு ஆதரவாக பழங்குடியின மூதாட்டிகள் ஜெபம் செய்யும் வீடியோ இணையத்தில் அவர்களது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow