வரலாற்றில் முதல் முறை... மனைவிக்குப் பதில் மகளே முதல் பெண்மணி... பாகிஸ்தான் அதிபரின் அதிரடி முடிவு !!
பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி மகள் அசீஃபா பூட்டோ அறிவிக்கப்பட உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி மகள் அசீஃபா பூட்டோ அறிவிக்கப்பட உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சியைப் பிடித்தன. ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த சூழலில் அந்நாட்டு அதிபராக இருந்த ஆரிஃப் அல்வியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய அதிபராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் கணவரும், முன்னாள் குடியரசு தலைவருமாக இருந்த ஆசிஃப் அலி ஜர்தாரி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது மனைவி பெனசீர் பூட்டோ உயிரிழந்த நிலையில், நாட்டின் முதல் பெண்மணி யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், உலக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தனது மகள் அசீஃபா பூட்டோ ஜர்தாரியை முதல் பெண்மணியாக அறிவிக்க உள்ளார், ஆசிப் அலி ஜர்தாரி.
அசீஃபா பூட்டோ ஜர்தாரி, ஆசிஃப் அலியின் கடைசி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழங்களில் தனது கல்வியைப் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்த அவர், தற்போது பாகிஸ்தானின் முதல் பெண்மணியாக அறிவிக்கப்பட உள்ளார். அவருக்கு முதல் பெண்மணிக்கான அனைத்து மரபுகளும், மரியாதைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?