உலகக் கோப்பை கால்பந்து போட்டி: நான்கு அணிகள் வெளியேறியது

அமெரிக்காவில் நடைபெறும் 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை நான்கு அணிகள் வெளியேறியுள்ளன. நான்காவது அணியாக ஜோர்டன் அணி வெளியேறி இருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: நான்கு அணிகள் வெளியேறியது
நான்கு அணிகள் வெளியேறியது

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய 3 நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகின்றன.  வரலாற்றிலேயே முதல்முறையாக 32 அணிகளுக்குப் பதிலாக 48 அணிகள் பங்கேற்கும் புதிய வடிவிலான உலகக் கோப்பை இதுவாகும்.

அணிகள் 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் மற்றும் நாக்-அவுட் (Knockout) முறைகள் நடைபெற்று வருகின்றன. ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியா - ஜோர்டான் அணிகளுக்கான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில்  2 - 1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணி வெற்றி பெற்றது. இதனால் ஜோர்டான் அணி வெளியேறியது. 

முன்னதாக, துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்) ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன. மொத்தமாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 12 குரூப்புகள் இருக்கின்றன. இதில் டாப் 2 அணிகள் (24) அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன.

கடைசி இடத்தில் இருக்கும் 12 அணிகள் வெளியேறுகின்றன. பின்னர், மூன்றாமிடத்தில் இருக்கும் டாப் 8 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுகின்றன. மீதமிருக்கும் 4 அணிகளுமாகச் சேர்த்து மொத்தமாக 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுகின்றன.

இதுவரை, துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்), ஜோர்டான் (குரூப் ஜே) ஆகிய நான்கு அணிகள் உலகக் கோப்பையில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow