ரேஷன் கடைகளில் கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்கடைகளில் கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வருமானத்தின் அடிப்படையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று முக்கிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன, மேலும் AAY (ஏழைகளில் ஏழை) மற்றும் அன்னபூர்ணா அட்டைகளும் உள்ளன. அரசு, இலவச அரிசி, கோதுமை, மற்றும் பண்டிகைக் காலங்களில் மளிகைப் பொருட்கள் வழங்குவதுடன், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 நிதி உதவி, மற்றும் பிற சிறப்புத் திட்டங்களையும் வழங்குகிறது.
புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் இலவசமாக ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி ரேஷன் கடைகளில் ஏற்கனவே 2 கிலோ இலவச கோதுமை தரும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து இருந்தார்.
மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோ இலவச அரிசி, சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கி வந்த புதுச்சேரி அரசு 2 கிலோ இலவச கோதுமையும் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து கேழ்வரகு மாவு இலவசமாக தரவேண்டுமென கோரிக்கை எழந்தது. இதனை ஏற்று ரேஷன் கடைகளில் சத்துணவாக 1 கிலோ கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

