என்னங்க சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை : பராசக்தி கதை திருட்டு புகார் : ஜன 2-ம் தேதி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி கதை திருடப்பட்ட வழக்கில், ஜனவரி 2-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
பராசக்தி படத்தின் திருடப்பட்டத்தாக எழுத்தாளர் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில், செம்மொழி என்ற பெயரில் தயாரித்து வைத்திருந்த கதை,2010-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அந்த கதையை தயாரிப்பாளர் தனசேகரனிடம் தான் கூறியதாகவும்.
அந்த கதையை இயக்குநர் சுதா கொங்கராவிடம் தனசேகரன் கூறி, தற்போது பராசக்தி என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜனவரி 2-ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தர தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சென்சார் செய்வதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், தற்போது கதை திருட்டு விவகாரத்திலும் பராசக்தி சிக்கியுள்ளதால், ஜனவரி 10-ம் தேதி படம் வெளியாவதில் கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
What's Your Reaction?

