விவசாயம் கைகொடுக்காததால் விரக்தி… பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை… சோகத்தில் கிராம மக்கள்

திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு அருகே விவசாயம் கைகொடுக்காததால், விரக்தியடைந்து, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Apr 23, 2024 - 21:24
Apr 23, 2024 - 21:29
விவசாயம் கைகொடுக்காததால் விரக்தி… பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை… சோகத்தில் கிராம மக்கள்

புதூர் நாடு மலைப்பகுதியில் உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளி (60). விவசாயியான இவருக்கு லட்சுமி (48) என்ற மனைவியும், நான்கு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் காளி தனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல், சாமை மற்றும் காய்கறி உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயம் செய்து வந்துள்ளார்.

 

ஆறு மாதத்திற்கு முன்பு இவர் செய்த விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த காளி, மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே விவசாயம் கை கொடுக்காததால் மனம் உடைந்த காளி, தொடர்ந்து மனைவியுடனும் வருகின்ற சண்டையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை  மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் உடனே அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி காளி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

விவசாயம் கைகொடுக்காததால், மனமுடைந்த விவசாயி காளி, பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow