ஈரோடு: சைக்கிள் ஓட்டி ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு .. இது ஜாலியான பிரசார பயணம்!

விஜயகுமார் நல்லவராக, வல்லவராக பண்பாளராக தொகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுபவராக இருப்பார் என்று ஜி.கே.வாசன் உறுதி

Apr 8, 2024 - 21:56
ஈரோடு: சைக்கிள் ஓட்டி ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு .. இது ஜாலியான பிரசார பயணம்!

ஈரோட்டில் சைக்களில் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ஜி.கே.வாசன், பாஜக தலைமையிலான தேசிய கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வீரப்பன்சத்திரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் இருந்து சூரம்பட்டி நால்ரோடு வரை சைக்களில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவர், மரப்பாலம், பன்னீர்செல்வம் பார்க், பேருந்து நிலையம் வழியாக வீரப்பன்சத்திரம் வரை திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை செய்தார்.  

"உங்களது வீட்டுப் பிள்ளையாக பாரதப் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும், அவரது எண்ணத்தை பிரதிபலிக்கவும்" ஈரோட்டில் விஜயகுமார் போட்டியிடுவதாக தெரிவித்த  ஜிகே வாசன், விஜயகுமார் நல்லவராக, வல்லவராக பண்பாளராக தொகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுபவராக இருப்பார் என்றும் உறுதியளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow