சர்க்கரை என்றால் இனிக்காது.. வாயில் போட்டால் தான் இனிக்கும்.. முதல்வர் ஸ்டாலினை தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி
சர்க்கரை என்றால் சொன்னால் இனிக்காது வாயில் போட்டால் தான் இனிக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வரும் போது ஆசை வார்த்தைகள் கூறி, வாக்குகளை பெறுவார்கள் தேர்தல் முடிந்த பின்பு விட்டு விடுவார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழகப் பொதுச் எடப்பாடியார், மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
இன்றைய தினம் இந்தப் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட், பழமார்க்கெட்க்கு நேரில் வந்து வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் நிலைமையை அறிய எப்படி விளைச்சல் உள்ளது, என்ன விலை என்பதை கேட்டு தெரிந்துஅறிந்தேன். இன்றைக்கு வறட்சியாக இருக்கிற காரணத்தினால், விளைச்சல் சில இடங்களில் குறைவாக உள்ளது அதனால் விலை அதிகம் உள்ளது என்று கூறினார்கள்.
அப்போது செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். ஆட்சி இருக்கும் பொழுது இழிவாக பேசுவதும், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் என்று திமுக அறிக்கை வெளியிட்டுள்ளதே என்று கேட்டதற்கு, எந்த அடிப்படையில் என்று நீங்கள் கூறுங்கள், வேறு வழியின்றி பேச வேண்டும் என்று இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அது உண்மை இல்லை அதிமுகவை பொறுத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடு தான்.
இன்றைக்கு நாங்கள் பத்தாண்டு அண்ணா திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம், மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும்போது அந்த காலகட்டத்தில், பிடித்தம் இல்லாமல் அகவிலைபடியை அரசு ஊழியர்களுக்கு கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் இரண்டு முறை, ஆறு மாதம்,ஆறு மாதம் என அந்த அகவிலைப்படியை பிடித்தும் செய்துதான் அரசு ஊழியருக்கு கொடுத்துள்ளார்கள் ஆகவே ,அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திராவிட முன்னேற்ற கழக அரசு நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிவிப்பில் கொடுத்தார்கள், தேர்தல் பரப்புரையிலும் வெளியிட்டார்கள் ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக அரசு அறிவிக்கவில்லை, ஸ்டாலினும் அறிவிக்கவில்லை, இதுகுறித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,நேற்றைய தினம் இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டேன் அதற்குத்தான் இந்த பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
சர்க்கரை என்றால் சொன்னால் இனிக்காது வாயில் போட்டால் தான் இனிக்கும். ஏன் மூன்று வருடம் நடைமுறைப்படுத்தவில்லை ஆக தேர்தல் வரும் போது ஆசை வார்த்தைகள் கூறுவார்கள், வாக்குகளை பெறுவார்கள் தேர்தல் முடிந்த பின்பு விட்டுவிடுவார்கள் அதுதான் திமுகவின் வாடிக்கை என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
What's Your Reaction?