பெண்களின் மாங்கல்யத்தை பறிக்கும் வகையில் காங். தேர்தல் அறிக்கை - பிரதமர் கடும் பாய்ச்சல்..

பெண்களின் மாங்கல்யத்தைப் பறிக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Apr 22, 2024 - 09:25
பெண்களின் மாங்கல்யத்தை பறிக்கும் வகையில் காங். தேர்தல் அறிக்கை - பிரதமர் கடும் பாய்ச்சல்..

ராஜஸ்தானில் பாஜக,  காங்கிரஸ் என இருமுனைப்போட்டி நிலவி வரும் நிலையில், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்கள் பிடியில் சென்று விட்டதை அறிந்தே அக்கட்சியில் இருந்து பலர் வெளியேறியதாகவும் அரச கட்சியாக காங்கிரஸ் தன்னை நினைத்துக் கொள்கிறது எனவும் பிரதமர் விமர்சித்தார். 

ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற காங்கிரசின் தேர்தல் அறிக்கையை அவர் சுட்டிக்காட்டினார். அரசு ஊழியர்கள், பழங்குடியினரின் சொத்துக்களை தனது மோசடி கமிட்டி மூலம் கணக்கெடுத்து அதனை பறிமுதல் செய்ய அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தேசத்தின் மகள்களிடம் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதை கணக்கிட்டு அவர்களிடம் இருந்து மாங்கல்யத்தையே பறிக்க காங்கிரஸ் முயல்வதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் வளத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை எனக் கூறி வந்த காங்கிரஸ்,  அப்படி பறிக்கப்பட்ட வளங்களை தற்போது ஊடுருவல்காரர்களுக்கும், அதிகக் குழந்தை பெறுபவர்களுக்கும் கொடுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். நாட்டு மக்களின் கடின உழைப்பால் பெறப்பட்ட வளம் இப்படி கொடுக்கப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow