கோவில் தெப்ப குளத்தில் தவறி விழுந்த இரு சிறுமிகள்... சோகத்தில் மூழ்கிய மக்கள்...

May 10, 2024 - 12:04
கோவில் தெப்ப குளத்தில்  தவறி விழுந்த இரு சிறுமிகள்... சோகத்தில் மூழ்கிய மக்கள்...

கன்னியாகுமரி அருகே கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேஷ்குமார்க்கு 14வயதில் பிரியா,12 வயதில் ஷிவாலி என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு தனியாக சாமி கும்பிட  சென்றுள்ளனர். பின்னர் கோவிலில் வழங்கிய அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு அருகில் இருந்த தெப்பக்குளத்திற்கு கை கழுவ சென்றநிலையில் கால் தவறி அக்கா தங்கை தவறி குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு கதறினர். தகவலறிந்து வந்த  தீயணைப்பு படை வீரர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் தேடிய நிலையில், 2 சிறுமிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரது உடலையும் உடற்கூராய்விற்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு சென்ற சிறுமிகள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow