“மூன்வாக்” படக்குழுவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் கொண்டாட்டம் !!
“மூன்வாக்” திரைப்பட குழுவினருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மூன்வாக் ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.
நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற, “மூன்வாக்” திரைப்படத்தின் மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது, ரசிகர் கூட்டத்தை பெரிதும் உற்சாகப்படுத்தியது.
இயக்குநர் மனோஜ் NS, இத்திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிற்கும் ஒன்றாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், மூன்வாக் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் தரும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் முதல் முறையாக தோன்றிய தருணத்தில் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மூன்வாக் திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் ஆடி, பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணித்து, வழங்கினார்.
What's Your Reaction?

