ஆண்டின் முதல் நாளே மகிழ்ச்சி செய்தி ! தங்கம், வெள்ளி விலை குறைந்தது

புத்தாண்டின் முதல் நாளே இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்து இருக்கிறது. 

ஆண்டின் முதல் நாளே மகிழ்ச்சி செய்தி ! தங்கம், வெள்ளி விலை குறைந்தது
Good news on the first day of the year

நேற்றைய தினம் காலை தங்கம் சவரனுக்கு ரூபாய் 400 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ 50 குறைந்து 12,550 ரூபாய் விற்பனை செய்யப்பட்து. சவரன் 1,00,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் ரூ 258 -க்கு விற்பனை ஆகிறது. கிலோ தங்கம் ரூ.2,58,000 விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய தினம் மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு  ரூ 550 குறைந்தது. ஒருகிராம் தங்கம் ரூ 12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும்  ஓரே நாளில் சவரன் ரூ.960 குறைந்தது.நீண்டநாட்களுக்கு பிறகு 1 லட்ச ரூபாய் கீழ் சென்று  சவரன் தங்கம் ரூ .99,840 –க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ 1 குறைந்தது. கிலோவிற்கு ஆயிரம் குறைந்தது. ஒருகிராம் வெள்ளி ரூ 257-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 2,57,000 விற்பனை ஆனது. 

இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.256க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் வெள்ளி விலை குறைந்துள்ளது. 

புத்தாண்டு தொடக்கத்தின் முதல்நாளை தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow