தமிழகத்திலும் பூர்வீக அட்டை வழங்க வேண்டும்: சிறுபான்மை மக்கள் நல கட்சி வலியுறுத்தல்
கேரளாவை போல தமிழகத்திலும் அனைத்து குடிமக்களுக்கும் பூர்வீக அட்டை அல்லது குடியிருப்போர் அட்டையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நல கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
அக்கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தயாமலர் ஸ்டீபன் நிருபர்களிடம் கூறியதாவது இந்தியாவில் கிறிஸ்தவர் மீது திட்டமிட்ட அச்சுறுத்தல் களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. டிசம்பரில் நடந்த தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல. எங் கள் வழிபாட்டுத் தலங்கள். கல்லி நிறுவனங்கள் மற்றும் கேரல் பாடும் எங்கள் குழந் தைகளைக் குறிவைத்து நடத் தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் களாகும்.
வாக்காளர் பட்டியலின் சிறுப்புத் தீவிர திருத்தம் என் பது சிறுபான்மையினரை அந் நியப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகும். சிறுபான்மை யினரை வடிகட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன் னோட்டம் என்று அஞ்சுகிறோம். எங்களுக்கு மாநில அரசுகள் கேடயமாக இருக்க வேண்டும். கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ள பூர்வீக அட்டை அல்லது நேட்டிவிட்டி கார்டு திட்டம் போல தமிழகத்திலும் அனைத் துக் குடிமக்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் என்ஆர்சி அல்லது சிஏஏ மூலமாக, சிறு பான்மையினரின் குடியுரிமையைப் பறிக்க முயற்சிக்கும் போது, மாநில அரசு வழங்கும் இந்த அட்டை ஏழைகளுக்கும். சிறுபான்மையினருக்கும் முக் கிய பாதுகாப்பாக அமையும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தமிழக அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
தொழில்நுட்பக் காரணங்களுக்காக வாக்காளர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறு பான்மையினர் நீக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தமிழகத்துக் குள் நுழையாதபடி, தேவாலயங்கள் மற்றும் கல்வி நிறு வளங்களுக்கு சிறப்பு பாது காப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினர்.
What's Your Reaction?

