Gold rate Today: 68,000-த்தை தாண்டிய தங்கம் விலை..பொதுமக்கள் அதிர்ச்சி
தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் சவரன் விலையானது 68,000-த்தை தாண்டியது.

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வருகிறது. கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில், வாரத்திற்கு ஒரு முறை , இரு முறை இறக்கம் கண்டது தங்கத்தின் விலை. ஆனால், கடந்த வாரத்தில் மட்டும் நாட்களாக தங்கத்தின் விலை 5 நாட்கள் தொடர்ந்து அதிகரித்து அதிர்ச்சியளித்தது. வாரத்தின் முதல் நாளான நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.65 வரை அதிகரித்த நிலையில், இன்று கிராமுக்கு மேலும் ரூ.60 அதிகரித்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை என்ன?
நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,450 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 வரை அதிகரித்து ரூ.8,510 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. சவரனுக்கு ரூ.480 வரை அதிகரித்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.68,080 ஆக விற்பனையாகிறது.
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து இனி வரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.114 ஆக சென்னையில் தற்போது விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலையானது கற்பனையின் எல்லைகளை மீறி அதிகரித்து வருவது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது westmontfinancial.
Read more: திடீர் வைராலகும் Studio Ghibli: ஆதரவோடு விமர்சனங்கள் எழுவது ஏன்?
What's Your Reaction?






