Guru peyarchi palan 2024: ரெடியா இருங்க.. குரு பெயர்ச்சியால் யார் வீட்டில் அதிர்ஷ்ட மழை.. மின்னல் வேக பலன்கள்

குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். ஒருவருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். மே 1ஆம் தேதி முதல் குரு பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில் குரு பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 30, 2024 - 08:19
Guru peyarchi palan 2024: ரெடியா இருங்க.. குரு பெயர்ச்சியால் யார் வீட்டில் அதிர்ஷ்ட மழை.. மின்னல் வேக பலன்கள்

மேஷம்: குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை ஆறாம் வீட்டின் மீது விழுவதால் நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும்.  குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டின் மீது விழுவதால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கப்போகிறது. குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்:  குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளை பார்க்கிறார். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணம் சுப காரியம் நடைபெறும். ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள்

மிதுனம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் அமரப்போவதால் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். குரு பகவானின் பார்வையால் உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பணத்தை கடனாக கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 

கடகம்: லாப ஸ்தானத்திற்கு வந்து அமரும் குரு பகவானால் சொத்து சேர்க்கை ஏற்படும். ராஜாதி ராஜயோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.  குருவின் பார்வையால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி மேல் வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. 

சிம்மம்: தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்யும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். குருவின் பொன்னான பார்வையால் வீடு நிலம் வாங்கலாம். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.  பதவி யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.

கன்னி:  ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுக்கு சகலவிதமான நன்மைகளையும் தரப்போகிறது. படிப்பில் இருந்த தடைகள் விலகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணமழையில் நனையப்போகிறீர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow