ஆம்லெட் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ், தொடர்ந்து சரியும் முட்டை விலை
ஆம்லெட், ஆபாயில் பிரியர்களுக்கு முட்டை விலை குறைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை. 3 தினங்களாக விலை சரிந்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு என்ற தனியார் அமைப்பு விலை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த விலையை கோழிப்பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்றவற்றால் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 40 காசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது. சில்லறை விற்பனையில் முட்டை விலை ரூ.8 ஆக விற்பனை செய்யப்பட்டது. வரலாற்றில் இல்லாத அளவு முட்டை விலை கடும் உயர்வை கடந்த வாரங்களில் கண்டது.
இதனால் தள்ளுவண்டி கடைகள், அசைவ உணவகங்கள், கேக் உள்ளிட்டவை விலை உயர்த்த ஆலோசித்து வந்தன. இந்த நிலையில், கடந்த முன்று தினங்களாக முட்டை விலை சரிய தொடங்கியுள்ளது. நாள்தோறும் 20 காசுகள் முட்டை விலை குறைந்து வருகிறது.
இன்று மேலும் 20 காசுகள் குறைந்து, முட்டை விலை ரூ 5.60 விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்கத்தில் சில்லறை விற்பனையில் ரூ 7 வரை விற்கப்பட்ட முட்டை, தற்போது ரூ 6 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருவது ஆம்லெட், ஆபாயில் பிரியர்களுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
What's Your Reaction?

