கொடைக்கானலுக்கு வரும் ஆபத்து- எச்சரிக்கை விடுத்த சிபிஎம் எம்.பி.,
சந்தர்ப்பங்களுக்கு ஏற்றார்போல் அதிமுகவினர் செயல்படுகின்றனர்.
கொடைக்கானலில் பிற்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என சிபிஎம் எம்.பி., சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சிபிஎம் எம்.பி., சச்சிதானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ” கொடைக்கானல் மேல் மலை பகுதியில் நிலப்பிளவு ஏற்பட்டது. அருகில் கேரளா மாநிலம் இருப்பதால் மூன்று துறை உடனடியாக அணுகி இதுகுறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தினோம். வயநாடு போல் ஏற்படக்கூடாது. இதன்படி மத்திய அரசு ஆய்வு செய்து தற்போது ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளனர்.தற்போது பயம் இல்லை. ஆனால் பிற்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக செய்ய வேண்டிய பரிந்துரைகள். நீண்ட காலம் செய்யக்கூடிய பரிந்துரைகள் என பல கூறி உள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் மூலம் செயல்படுத்த உள்ளோம்.
அதிமுகவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறுவார்கள். வாக்கு வங்கி குறையும் என்பதற்காக பாஜகவை விட்டு அதிமுகவினர் வெளியே வந்தனர்.குடியுரிமை சட்டம் செயல்படுத்தப்பட்டதற்கு அதிமுகவே காரணம்.அதிமுக- பாஜகவை எதிர்க்கக்கூடியது என்பதில் நம்பகத்தன்மையாக இல்லை. சந்தர்ப்பங்களுக்கு ஏற்றார்போல் அதிமுகவினர் செயல்படுகின்றனர். சிபிஎம் பொறுத்தவரை மாநாடு மூலமாகவே கூட்டணிகளை தேர்வு செய்கிறோம். அதன்படி கடைசியாக நடந்த மாநாடு இப்படி நாங்கள் இண்டியா கூட்டணியில் மத்தியிலும் மாநிலத்தில் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம்.
அடுத்த மாநாடு ஏப்ரலில் நடத்தப்படும் அதன்படி எங்களது கூட்டணி அறிவிக்கப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் இல்லை. இங்கு பல்வேறு சிகிச்சைகளுக்கு மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.197 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு அதில் பல்வேறு சான்றிதழ்கள் மத்திய அரசு கேட்டு பலர் பதவி ஏற்க முடியவில்லை. இதில் தேவையான சான்றிதழை பெற்று தற்போது 127 நபர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளாக சேர உள்ளனர் என்று தெரிவித்தார்.
What's Your Reaction?