பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்ட இந்து முன்னணி நிர்வாகி உள்பட 3 பேர் கைது

இதுகுறித்து பெண் காவலர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

Jan 8, 2024 - 13:42
Jan 8, 2024 - 14:40
பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்ட  இந்து முன்னணி நிர்வாகி உள்பட 3 பேர் கைது

இந்து முன்னனி மாவட்ட செயலாளர்  ரோந்துப் பணியில் இருந்த பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து  சாலை மறியலில் ஈடுபட்ட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை ரயில் நிலையம் பகுதியில் பெண் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். ரயில்வே காவல்துறையினர் குடியிருப்பு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு பொது இடத்தில்  3 பேர் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் கோவில் முன்பு மது அருந்துகிறீர்களே? என கேட்டு உள்ளார்.அதற்கு அவர்கள் பெண் காவலரை தரக்குறைவாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து ஆஞ்சநேயர் கோவில் அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து பெண் காவலர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் காவல் துறையினரையும் தாக்குறைவாக பேசி உள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெண் காவலரை தாக்குறைவாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து இந்து முன்னனி மாவட்ட செயலாளர் குபேந்திரன், அவரது சகோதரர் ரவி மற்றும் முத்தமிழ்ச் செல்வன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow