இல்லதரசிகள் நிம்மதி பெருமூச்சி : தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைவு! வெள்ளி கிலோவிற்கு ரூ.6 ஆயிரம் குறைந்தது
காலையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை மாலையில் குறைந்துள்ளது. இல்லதரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,700க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே போன்று நேற்று வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.271க்கும், கிலோவுக்கு மட்டுமே ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,71,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,02,960 விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ஒருகிராம் தங்கம் ரூ. 12,870-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.283-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.12,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,83,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மாலையில் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்தது. சவரன் ரூ, 1.02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 70 குறைந்து கிராம் ரூ.12,800 விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ 6 குறைந்து, கிராம் ரூ .277-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு 6 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,77,000 விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

