அதிசயம் ஆனால் உண்மை! மகராஷ்டிரா நகராட்சி தேர்தல் பாஜக-காங்கிரஸ் கூட்டணி !!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரசுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது தேசிய அளவில் விவாத பொருளாக மாறியுள்ளது. 

அதிசயம் ஆனால் உண்மை! மகராஷ்டிரா நகராட்சி தேர்தல் பாஜக-காங்கிரஸ் கூட்டணி !!
BJP-Congress alliance

அரசியலில் நிரந்திர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள். இந்த கருத்து தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அரங்கேறி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கும் பாஜகவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பல்வேறு இடங்களில் பாஜகவும், சிவசேனையும் நேருக்குநேர் வேட்பாளர்களை நிறுத்தினர்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தாணே மாவட்டத்தின் அம்பர்நாத் நகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நகராட்சியில் பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனைக்கு இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.

மொத்தமுள்ள 60 இடங்களில் நகராட்சித் தலைவர் பதவியைப் பெற 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சிவசேனை 27 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 4, சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றன.

நகராட்சித் தலைவர் பதவிக்கு பாஜக தேஜஸ்ரீ கரஞ்சுலேயும், சிவசேனை மனிஷா வாலேகரையும் வேட்பாளராக போட்டியிட்டனர்.  இந்த நிலையில், பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸின் , தேசியவாத காங்கிரஸின் (அஜித் பவார்) , ஒரு சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் 31 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜகவின் தேஜஸ்ரீ கரஞ்சுலே நகராட்சித் தலைவராகவுள்ளார்.

இதன்மூலம் 25 ஆண்டுகாலமாக சிவசேனையின் கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை அக்கட்சி இழந்துள்ளது. இதனிடையே, பாஜக - காங்கிரஸ் கூட்டணிக்கு அம்பர்நாத் விகாஸ் அகாடி எனப் பெயரிட்டுள்ளதாக தாணே மாவட்ட ஆட்சியருக்கு பாஜக எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனையை வீழ்த்துவதற்காக காங்கிரஸுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow