மனைவியை கொலை செய்து விட்டு நாடகம்-7 மாதங்களுக்கு பிறகு கணவன் கைது

7 மாதங்களுக்கு பிறகு போலீசார் கட்டம் கட்டி தூக்கி சிறையில் அடைத்தனர்.

Jan 9, 2024 - 23:32
மனைவியை கொலை செய்து விட்டு நாடகம்-7 மாதங்களுக்கு பிறகு கணவன் கைது

சிதம்பரம் அருகே காதலித்து திருமணம் செய்த மனைவியை கடலில் காலால் அமுக்கி கொன்றுவிட்டு கடல் அலையில் சிக்கி இறந்து விட்டதாக நாடகமாடிய சில மாதங்களில் கணவனை கள்ளக்காதலியுடன் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அடுத்த பச்சையாங்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (35)இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகா (33)என்பவரை காதல் திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்தாண்டு 15.5.2023 அன்று சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரைக்கு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் குளிக்க வந்தபோது கார்த்திகா அலையில் சிக்கி இறந்து விட்டதாக உறவினர்கள் மற்றும் ராமநாதன் தெரிவித்துள்ளனர்.அப்போது தகவல் அறிந்து சென்ற புதுச்சத்திரம் போலீசார் கார்த்திகாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து அடக்கம் செய்துள்ளனர்.ஆனால் ராமநாதன் நடவடிக்கையில் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் இருந்துள்ளது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலி பாரதி என்ற பெண்ணுடன் ராமநாதன் கடந்த ஆண்டு தனது இரண்டு பிள்ளைகளை விட்டு விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.இதனால் போலீசாருக்கு மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இறந்துபோன கார்த்திகாவின் பரிசோதனையில்  தாடைப்பகுதி உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதனால் கார்த்திகா மரணம் கொலை என போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதனை தேடி வந்தனர்.ஆனால் கள்ளக்காதலி பாரதி உடன் ராமநாதன் பல்வேறு பகுதிகளில் மாறி மாறி சென்றதால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் இருவரும் ஜாலியாக இருப்பதற்கு பாரதியின் கணவர் ராமராஜன் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தை வைத்துக்கொண்டு சுற்றி திரிந்து உள்ளனர். 

கடைசியாக சென்னை, திருவள்ளூர் பகுதியில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் ராமநாதன் மற்றும் கள்ளக்காதலி பாரதியை அழைத்து வந்து விசாரணை செய்ததில் கள்ளக்காதலிக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என ராமநாதன் தெரிவித்ததோடு பல அதிர்ச்சியீட்டும் தகவலை தெரிவித்துள்ளார். அதில் தனது மனைவி கார்த்திகாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாகவும், வீட்டிற்கு அனுப்பும் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து வந்ததோடு, மகளிர் குழுக்களிலும் கடன் பெற்று செலவு செய்து வந்ததாலும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் கார்த்திகா உறவினர் வீட்டுக்கு கோபித்துக்கொண்டு சென்றுள்ளார்.அப்போது அழைத்து வரும்போது வலுக்கட்டாயமாக சாமியார்பேட்டை கடற்கரைக்கு ராமநாதன் மனைவி கார்த்திகா குழந்தைகள் மற்றும் உறவினர்களோடு வந்து திட்டமிட்டு கார்த்திகாவை அலை வரும்போது காலால் அமுக்கி கொன்றுவிட்டு கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்து பல்வேறு பகுதிகளில் ஜாலியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

கடற்கரையில் குளிக்கும்போது மனைவி அலையில் சிக்கி உயிரிழந்து விட்டதாக நாடகமாடி ஜாலியாக சுற்றித்திரிந்த கணவனை சுமார் 7 மாதங்களுக்கு பிறகு போலீசார் கட்டம் கட்டி தூக்கி சிறையில் அடைத்தனர்.

 கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்த நிலையில் கணவனே மனைவியை தண்ணீரில் அமுக்கி கொன்று விட்டு நாடகம் ஆடியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow