சிதம்பரம் : கொட்டி தீர்த்த கனமழையால் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீர்

பள்ளி நுழைவாயில் முன்பு முட்டி அளவு தண்ணீர் இருந்ததால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து கடந்து சென்றனர்.

Jan 9, 2024 - 15:42
Jan 9, 2024 - 23:34
சிதம்பரம் : கொட்டி தீர்த்த கனமழையால் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீர்

சிதம்பரம் அருகே 20 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் இடுப்பளவு மழைநீர் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம்,சிதம்பரம் அருகில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் கம்பன் தெரு இயங்கி வருகிறது.இந்த தெருவில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை தண்ணீரில் மூழ்கியதால் சாலை இல்லாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

சாலையில் தண்ணீர் உள்ளதால்  பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டுமென சாலையில் உள்ள இடுப்பளவு தண்ணீரில் உயிரை பணயம் வைத்து கரையை கடந்து தான் வாங்கி சென்று வருகின்றனர்.இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை என பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிற்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் சாலையை உயர்த்தி போட்டு தர வேண்டுமானால் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் நந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளி நுழைவாயில் முன்பு முட்டி அளவு தண்ணீர் இருந்ததால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து கடந்து சென்றனர்.

 இதுகுறித்து தலைமை ஆசிரியர் கேட்கும்போது, ஆட்கள் வைத்து மாணவர்களை தூக்கி சென்று தான் கரையை கடத்து விட்டு வருகிறோம் எனதெரிவித்தார்.மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் அந்த கிராமத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow