காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார்!

ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சராக சுரேந்தர் குமாரும் பதவியேற்றுக்கொண்டனர்

Oct 16, 2024 - 11:57
Oct 16, 2024 - 13:07
காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார்!

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது, 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக். 1ம் தேதி 3வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து வெளியான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு இருக்கும் எனவும், காங்கிரஸ் வெற்றிப் பெறும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படியே தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ‘நயா காஷ்மீர்’ என்ற முழக்கத்துடன் தனது பிரசாரத்தை முன்னெடுத்தது பாஜக. ஆனால் அதுவே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014க்குப் பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில், 46 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும். 

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதனையடுத்து அக்டோபர் 8ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்தது. இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகள், காங்கிரச் 6 தொகுதிகள், சிபிஎம் 1 தொகுதி என வெற்றி பெற்றது.

அதேபோல தனித்து களம் கண்ட பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் மிக முக்கியமாக ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 7 இடத்திலும் , இதர கட்சி 1 இடத்திலும் வென்றது.

PDP கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்லிதாக கடும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்பார் என அவரது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சராக சுரேந்தர் குமாரும் பதவியேற்றுக்கொண்டனர். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்து வைத்தார். உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், பிரியங்கா பங்கேற்றனர். மேலும், தமிழகத்தில் மழை பாதிப்புகள் அதிகமாக உள்ளதால்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்பு...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow