கொடைக்கானல் வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி... 

கொடைக்கானல் வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது

Mar 3, 2024 - 14:16
Mar 3, 2024 - 15:44
கொடைக்கானல் வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி... 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கிரே ஹெட்டட் கென்னறி பிளே கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், யுரேசியன் பிளாக் பேர், சுமிட்டர் வாபுலர், நீலகிரி ஃபிளை கேட்ச்சர், ஓரியண்டல் ஒயிட் ஐ, பழனி லாபிங் திரஸ், பார்விங் பிளை கேட்ச்சர், ஸ்டிக்கில்டு புளு பிளை கேட்ச்சர், ரஸ்டி டைல்டு பிளை கேட்சர், உள்ளிட்ட பல்வேறு பறவைகள் உள்ளன. 

இந்நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பாம்பே சோலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மற்றும் பிற வனப்பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுக்கும் பணிகள் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று வனச்சரகர் சிவகுமார் தெரிவித்துள்ளார். பறவைகள் கணக்கெடுப்பு நிறைவுபெற்றவுடன் பறவைகளின் பெயர் வகைகள் கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow