இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. அரசுக்கு எதிராக ஆசிரியர்களை திருப்பும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. ஐபெட்டோ பகீர்

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்ப அலையை விட, கல்வித்துறையில் அன்றாடம் வெளிவரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கூறியுள்ளார்.

May 2, 2024 - 17:23
May 2, 2024 - 17:47
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. அரசுக்கு எதிராக ஆசிரியர்களை திருப்பும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. ஐபெட்டோ பகீர்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கல்வித்துறையில் அன்றாடம் வெளிவரும் அபாய அறிவிப்புகளினால் ஆசிரியர்கள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள், கல்வித்துறை இதை உணர வேண்டாமா?. வெப்ப அலை தாக்குதலை விட, பணி நிரவல் அரசாணை மூலம் (G.O.243 நாள்:-21.12.2023) பதவி உயர்வு அமல்படுத்தும் அறிவிப்புகளை ஆசிரியர்கள் மத்தியில் பரவவிட்டு, ஏழை மாணவர்களின் கல்வி நலனை பாதிக்க வைக்க முன் வருவது ஏன்?” என்ற கேள்விகளுடன் அறிக்கையைத் தொடங்கியுள்ளார்.

டேராடூனில் கனவாசிரியர்கள் முன்னிலையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜூன் 2024லில் இருந்து மாணவர்கள் வருகைப்பதிவை தவிர வேறு பதிவுகளை எமிஸ் இணையதளத்தில் செய்ய வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்காது என்றும், இதற்காகத் தனியாக 14,000 பேரை நியமிக்க இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். 

எங்கு சென்றாலும் நம் நினைவாக இருக்கிறார் என்பதை இந்த அறிவிப்பு எடுத்துச் சொல்கிறது. வரவேற்றுப் பாராட்டுகிறோம்..! ஆனாலும் பள்ளிக்கல்வித்துறையில் என்ன நடைபெறுகிறது? என்பதனை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது நமது கடமையல்லவா?

மே மாதம் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் தொடக்கக் கல்வித்துறை வாயிலாக 2 ஆயிரத்து 236 இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். 

10 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. முந்தைய அரசும், தற்போதைய அரசும் செய்யவில்லை, செய்ய முன்வரவுமில்லை. பின்தங்கிய எட்டு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாகவே இருந்து வருகிறது. அந்தப் பகுதி மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் அரசுக்குத் தெரியாதா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow