நடிகை திரிஷாவை தவறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை! - அண்ணாமலை வலியுறுத்தல்!

Feb 22, 2024 - 20:23
நடிகை திரிஷாவை தவறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை! - அண்ணாமலை வலியுறுத்தல்!

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில்  எல்.முருகன், மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளதாகவும், இவருக்கு வழங்கிய பதவி  தமிழகத்தில்  பாஜகவை மேலும் பலப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷாவை கடந்த  ஆறுமாதமாக சிலர் தவறாகப் பேசி வருவதாகவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்ட அண்ணாமலை, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow