தலைமை ஆசிரியர் கொடுத்த மனஅழுத்தம்.. மாணவி தற்கொலை !
பேராவூரணியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த மன அழுத்தத்தால் 12-ம் வகுப்பு மாணவி நீவிகா கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
பேராவூரணியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த மன அழுத்தத்தால் 12-ம் வகுப்பு மாணவி நீவிகா கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி நீவிகா அவரது வயது 16 இவர் பிளஸ் டூ படித்து வருகிறார். மாணவிக்கு தந்தை இல்லாத நிலையில் அம்மா துர்கா. கூலி வேலை செய்து மாணவியை படிக்கவைத்து கொண்டிருக்கிறார். மாணவி பள்ளியில் வாலிபால் போட்டியில் மாநில அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக தனலட்சுமி என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். அவர் வந்த பிறகு மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப மறுத்துள்ளார். மேலும் மாணவிகளை அரைக்கால் டவுசர் போட்டு கொண்டு பசங்களுடன் சுற்றுகிறாயா என்று மாணவியை கண்டித்துள்ளார் அத்துடன் விளையாட்டு பயிற்சிக்கும் அனுப்ப மறுத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து தங்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்ட மாணவி நீவிகாவை தலைமையாசிரியர் தனலட்சுமி நடத்தை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது உறவினர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதனைத்தொடர்ந்து நேற்று திங்கள் கிழமை மாணவி பள்ளிக்கு வராததை அறிந்த சக மாணவிகள் விசாரித்தபோது மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிந்தது. இதை அடுத்து இன்று மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாயிலில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. காவல்துறையினர் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?