GT-க்கு எதிராக LSG முதல் வெற்றி...யாஷ் தாக்கூரின் பெளலிங்கில் சுருண்டது குஜராத்...

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று அசத்தியது. 

Apr 8, 2024 - 08:30
GT-க்கு எதிராக LSG முதல் வெற்றி...யாஷ் தாக்கூரின் பெளலிங்கில் சுருண்டது குஜராத்...

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய டி காக் 6 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக விளையாடிய  அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 33 ரன்களிலும், படிக்கல் 7 ரன்களிலும் விக்கெட்டை இழக்க நேரிட்டது. இதையடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணிக்கு தெம்பு கொடுத்தார். குஜராத் வீரர்களின் பந்துகளை சிதறடித்த ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் 32 மற்றும் ஆயுஷ் படோனி 20 ரன்கள் அடித்தனர். 

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் உமேஸ் யாதவ் மற்றும் தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து 164 ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது. சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முதலில் களமிறங்கினர். இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென 19 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாய் சுதர்ஷன் 31 ரன்கள்,  ஷரத் 2 ரன்கள், தர்ஷன் நல்கண்டே 12 ரன்கள், விஜய் சங்கர் 17 ரன்கள்,  உமேஷ் யாதவ் 2 ரன்கள், ராகுல் தேவாட்டியா 30 ரன்கள் அடித்து அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இதனால் 18.5 ஓவர்களில் குஜராத் அணி 130 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

லக்னோ அணி தரப்பில் யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளையும் குருணால் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி குஜராத் அணி வீரர்களை திணறடித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow