சென்னையில் 3 நாட்களாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..

Income Tax Department

Apr 8, 2024 - 08:27
சென்னையில் 3 நாட்களாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..

மக்களவை தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் பணக்காரர்கள் ரகசியமாக  பணம் வைத்திருப்பதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் சென்னையில் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் முக்கிய நபர்களாக உள்ள ஒப்பந்தக்காரர் ராமச்சந்திரன், பொறியாளர் தங்கவேலு  ஆகியோரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை அடையாறில் உள்ள  அரசு  ஒப்பந்தக்காரர் ராமச்சந்திரன் வீட்டில் நடைப்பெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய இணை தலைமை பொறியாளர் தங்கவேலு ஆகியோரது வீடுகளில் கடந்த மூன்று நாட்களாக  சோதனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தங்கவேலு என்பவர் வீட்டில் நேற்று இரவு சோதனை நிறைவடைந்துள்ளது. அடையாறில் உள்ள ராமச்சந்திரன் வீட்டில் இன்று காலை சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பணப்பட்டுவாடா புகாரையடுத்து கடந்த மூன்று தினங்களாக இருவது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow