கடற்கொள்ளை : 35 சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒப்படைத்த இந்திய கடற்படை...
பல்கேரியாவின் சரக்கு கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்களை கைது செய்த இந்திய கடற்படையினர், மும்பை போலீசாரிடம் இன்று (மார்ச் 23) ஒப்படைத்தனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். 3 மாதங்களாக தங்கள் கட்டுப்பாட்டில் கப்பலை வைத்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (மார்ச் 16) இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் மூலம் இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது. சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 17 பணியாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் பிடித்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சோமாலிய கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படை இன்று (மார்ச் 23) மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தது.
What's Your Reaction?