"இந்தியா இன்று குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக உள்ளது" - நடிகர் மன்சூர் அலிகான் விமர்சனம்...
இந்தியா என்பது மிகப்பெரிய ஜனநாயக நாடு எனவும், அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக உள்ளதாகவும் நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 20-ம் தேதி வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், பேர்ணாம்பட்டு, குடியாத்தம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (மார்ச் 23) காந்தி ரோடு, பாபுராவ் தெரு, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த அவர், அப்பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையும் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு டிஸ்மிஸ் ஆனது போல், தற்போதைய ஆட்சியும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் பள்ளிக் குழந்தைகளை வைத்து பிரதமர் மோடி ரோட் ஷோ நடத்துவதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது அராஜகத்தின் உச்சகட்டம் என சாடியுள்ளார்
What's Your Reaction?