Supreme Court : முறையில்லாமல் பேசிவிட்டு, தற்போது பாதுகாப்பு கேட்டு வருவீர்களா?- உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் சுளீர் கேள்வி...!
விசாரணையை மார்ச் 15ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
"தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் 15ஆம் தேதி ஒத்திவைப்பு"
முன்னதாக சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து 6 மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதைதொடர்ந்து உதயநிதி சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க கோரியும் பாதுகாப்பு வழங்கக்கோரியும் கருத்து சுதந்திரத்திற்கான சட்டம் 32ன் கீழ் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நீதிபதிகள் சஞ்சய் கர்னா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு பின் பேசிய நீதிபதிகள் சட்டம் 19(1)(அ), 25 ஆகியவற்றை மீறும் வகையில் உதயநிதி செயல்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்தனர். உதயநிதி ஒரு சமானிய மனிதர் அல்ல - ஒரு அமைச்சர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அதனடிப்படையில் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பேச்சு,கருத்து, மத சுதந்திரங்களுக்கு எதிராக உரிமைகளை பயன்படுத்திவிட்டு தற்போது சட்டப்பிரிவு 32ன் கீழ் பாதுகாப்புக்காக உச்சநீதிமன்றத்துக்கு வருவீர்களா எனவும் கேள்வியெழுப்பினர். இதையடுத்து வழக்கு தொடர்பான விசாரணையை மார்ச் 15ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?