தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்… நாடு முழுவதும் முடங்கிய ரயில் சேவை..! 

'டெல்லி சலோ' போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக ரயில் மறியலில் விவசாயிகள் ஈடுப்பட்டதால், நாடு முழுவதும் ரயில் சேவை முடங்கியது. 

Mar 10, 2024 - 16:27
தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்… நாடு முழுவதும் முடங்கிய ரயில் சேவை..! 

'டெல்லி சலோ' போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக ரயில் மறியலில் விவசாயிகள் ஈடுப்பட்டதால், நாடு முழுவதும் ரயில் சேவை முடங்கியது. 

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பல்வேறு விவசாய கங்கத்தினர் பேரணியாக கிளம்பினர். ஆனால், அவர்கள் டெல்லியில் நுழைய வாய்ப்பின்றி ஹரியாணா மாநில எல்லையிலேயே முடக்கப்பட்டனர்.

இதனையடுத்து, தங்களது போராட்ட வியூகத்தை மாற்றிய விவசாய சங்கங்கள், அதன் அங்கமாக இன்றைய தினம் (மார்ச் 10) ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. 

அதன்படி (மார்ச் 10) இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலான 4 மணி நேரத்துக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் உட்பட நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 

விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தென் மாநிலங்களிலும் விவசாயிகள் தனிச்சையாக ரயில் மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்களை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow