D.M.K என்றால் என்ன..? ஜெ.பி.நட்டா சொன்ன அடடே விளக்கம்
திமுக என்றால் குடும்பக்கட்சி, பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து கட்சி என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா விமர்சித்துள்ளார்
தென்காசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் பேசிய அவர், " நரேந்திர மோடியை 3-வது முறையாக பிரதமராக்க ஜான்பாண்டியனை வெற்றி பெற வைக்க வேண்டியது கட்டாயம்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா, 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் நம் நாட்டினை பொருளாதாரத்தில் 3-வது பெரிய நாடாக கொண்டுவர வேண்டியது அவசியம்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் மிகவும் நேசிக்கிறார். ஐ.நா. சபையில் திருக்குறளுக்கு தனி இடத்தை பெற்றுத் தந்துள்ளார். காசியில் தமிழ் சங்கம் அமைத்துள்ளார். கிராம சாலைகளை பல்வேறு நெடுஞ்சாலைகளுடன் இணைத்துள்ளார். 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்துள்ளனர். 4 கோடி நபர்களுக்கும் அதிகமாக ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
4 மடங்கு அதிகமாக மத்திய அரசின் பணம் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அதைச் சொல்லாது. தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்றப் போகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திமுக என்பது D - DYNASTY (குடும்ப கட்சி), M - MONEY LAUNDERING (பணமோசடி), K - KATTAPANCHAYAT (கட்டப்பஞ்சாயத்து)" என விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?