"ஆபாச படம் பார்ப்பது குற்றமில்லையா..?" - உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு..! 

ஆபாச திரைப்படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்துக்கு உச்சநீதிமன்ற அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

Mar 11, 2024 - 18:00
"ஆபாச படம் பார்ப்பது குற்றமில்லையா..?" - உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு..! 

ஆபாச திரைப்படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்துக்கு உச்சநீதிமன்ற அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர்மீது குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த இளைஞர். 

இந்த வழக்கின் விசாரணையானது கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என்றும், அதனை பிறருக்கு அனுப்புவது தான் சட்டப்படி குற்றம் என்றும் கூறி இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 

இளைஞரை விடுதலை செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. 

அப்போது "ஒரு நீதிபதி எப்படி இதுபோன்ற கருத்தை சொல்ல முடியும், இது கொடுமையானது" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow