மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறை.. ஜெயக்குமார் கடும் தாக்கு

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jun 20, 2024 - 16:54
மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறை.. ஜெயக்குமார் கடும் தாக்கு

கள்ளக்குறிச்சி: விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில்  37 பேர் உயிரிழந்துள்ளனர். 125க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய மரணம் குறித்து எதிர்கட்சியினர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதேபோல மக்கள் நீதி மையம் தலைவர் கமல்,நடிகர் விஷால், பா.ரஞ்சித் ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இந்த நிலையில், திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது!.இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!

நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்!
மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்?

ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார் ஜெயக்குமார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow