Kamal: ‘‘மக்களவை சீட் வேணாம்… மாநிலங்களவை எம்பி ஆகுறேன்..” குறுக்கு வழியை கமல் தேர்வு செய்தது ஏன்?
வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையவுள்ளது, அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. கோவை அல்லது தென் சென்னையை கமல் கேட்பதால் கூட்டணியில் இழுபறி என்று சிலநாட்களக பேச்சு எழுந்தது. கடந்த வாரமே கமல்ஹாசன் தக் லைஃப் படப்பிடிப்புக்காக செர்பியா புறப்பட இருந்தார். ஆனால், தொகுதி பங்கீடு பேச்சு முடியாத காரணத்தால் அந்த பயணத்தை தள்ளி வைத்தார்.
கமலுக்கு கோவை மற்றும் தென்சென்னையை ஒதுக்குவதில் திமுவுக்கு சில பிரச்னைகள் இருந்தன. காங்கிரசுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, அதிலிருந்து ஒரு தொகுதியை அவர்கள் கமலுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக நிபந்தனை வைத்தாகவும் பேசப்பட்டது. ஆனால், அதற்கு காங்கிரஸ் ஓகே சொல்லிவில்லை. மேலும், திமுக சின்னமான உதய சூரியனில் நிற்கமாட்டேன். டார்ச் லைட் சின்னத்தில் தான் நிற்பேன் என்று கமல் முரண்டு பிடித்ததாகவும் கேள்வி. திமுக அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆதரவு கமலுக்கு இருந்ததால் அவரை ஒதுக்கவும் முடியாமல், கடிந்து பேசவும் முடியாமல் திமுக மூத்த தலைவர்கள் தவித்ததாக தகவல்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் சென்றார் கமல்ஹாசன். அவருக்கு ஒன்று அல்லது 2 தொகுதி ஒதுக்கப்படும், இன்றே உடன்படிக்கை கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கே டுவிட்ஸ்ட். இந்தமுறை மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிடவில்லை. ஆனால், திமுக கூட்டணிக்காக அனைத்துத் தொகுதியிலும் பிரச்சாரம் செய்வார். அடுத்தாண்டு நடக்கவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு சீட் தரப்படும் என்று கையெழுத்தானது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
கோவை அல்லது தென்சென்னையில் நின்றால் கூட்டணிக் கட்சிகள் ஆதரவின்றி ஜெயிக்க முடியாது. தேர்தலுக்காக பல கோடிகளை செலவு செய்ய வேண்டும். தவிர, ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதெல்லாம் தனக்கு செட்டாகாது என்று நினைத்த கமல், எம்பி ஆக வேண்டும். எப்படி ஆனால் என்ன? மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு கஷ்டப்பட்டு எம்பி ஆவதை விட, மாநிலங்களவைத் தேர்தலில் நின்று ஈஸியாக எம்பி ஆகிவிடலாம் என கமல்ஹாசன் நினைத்ததால் இந்த அதிரடி முடிவாம்.
ஆனாலும், இதை கமல் கட்சியினரும் திமுகவினரும் ரசிக்கவில்லை. அவருக்கு ஏன் ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டை வீணாக்க வேண்டும் என்று திமுகவினரும், நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் பிரச்சாரம் மட்டும் செய்தால் மக்கள் மதிக்கமாட்டார்கள். அடுத்த ஆண்டுக்குள் அரசியல் நிலவரம் மாறலாம். திமுக அந்த ஒரு சீட்டை நமக்கு தருமா? நம்மை மாநிலங்களவை எம்பி ஆக்குவார்களா என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் பொங்குகிறார்களாம். ஆனால், கமலோ ரொம்ப கஷ்டப்படாமல், அதிகம் செலவழிக்காமல், நேரத்தை வீணடிக்காமல் மாநிலங்களவை எம்பி ஆவதே நல்லது. சட்டசபைத் தேர்தல் பாணியில், இந்தமுறையும் தோற்றுவிட்டால் அது தனக்கும் கட்சிக்கும் பெரிய அவமானம் என்று நினைக்கிறாராம்.
What's Your Reaction?