குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை
குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
                                
கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும் அதை சலிப்பாக மாற்றிக்க வேண்டாம்க. முக்கியமான தீர்மானங்கள் எதையும் நீங்களே யோசிச்சு எடுங்க. பிறர் பேச்சை முழுமையா நம்ப வேண்டாம்க.
குடும்பத்துல ஒற்றுமை இடம்பிடிக்கும்க. தம்பதியருக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்க. சகோதர உறவுகளுக்கு இடையில இருந்த சச்சரவுகள் மறைஞ்சு, ஒற்றுமை இடம்பிடிக்கும்க.மறைமுக எதிரிகளால ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் மாறும்க. சுபகாரியங்கள்ல அவசரத் தீர்மானங்களைத் தவிருங்க. பணவரவு அதிகரிக்கும்க. ஆடம்பரப் பொருட்களை வாங்கவும், வீடு, வாகனம், மனை விருப்பங்களை நிறைவேற்றிக்கவும் சந்தர்ப்பம் அமையும்க.
செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் உழைப்பை முதலீடாக்கினா, உயர்வு லாபமாகக் கிடைக்கும்க. அயல்நாட்டு வர்த்தகங்கள் தடைநீங்கிக் கைகூடும்க. புதிய தொழில் எதையும் முறையாக யோசித்து செய்வது பெரும் லாபத்துக்கு வழி செய்யும்க. வரவை நிரந்தரமான செல்வமாக ஆக்கிக்க முறையான சேமிப்பை செய்துக்கறது நல்லதுங்க. பழைய கடன்களை பைசல் செய்துடுங்க.
அரசு, அரசியல் துறையினர் புறம்பேசும் நபர்களைப் புறம்தள்ளுவது அவசியம்க. உயர்வுகள் வரும்போது உடனிருப்போர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்க. வாக்குறுதிகள் தருவதில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாதுங்க. பணத்தைக் கையாள்றவங்க கவனச் சிதறலைத் தவிருங்க.
மாணவர்களுக்கு எதிர்பார்த்த உயர்கல்வி வாய்ப்புகள், அயல்நாட்டுக் கல்வி வாய்ப்புகள் மனம்போல கைகூடும்க. மறதியை மறந்துட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிச்சா, நிச்சயம் பெயரும் புகழும் பெறலாம்க.
கலை, படைப்புத் துறையினரோட திறமைகள் பளிச்சிடக்கூடிய காலகட்டம்க. சிலருக்கு அரசுவழி பாராட்டுகள், விருதுகள் கிடைக்க வாய்ப்பு உண்டுங்க.
இரவு நேரப் பயணத்தில் இடைவழியில் இருட்டில் இறங்குவதைத் தவிருங்க. உடன்வரும் நட்பிடம் கவனமா இருங்க.
உடல்நலத்துல அக்கறை அவசியமான காலகட்டம்க. குறிப்பாக உணவிலும்,தூக்கத்திலும் கவனம் செலுத்தினாலே உடல்நலத்தைத் தக்கவைச்சுக்கலாம்க. நரம்பு, மூட்டு உபாதைகள் வரலாம்க. இந்த வருஷத்துல இஷ்ட மகானை தினமும் கும்பிடுங்க. எண்ணமெல்லாம் ஈடேறும்.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ                        
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

                                                                                                                                            
                                                                                                                                            
                                                                                                                                            