குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 12, 2024 - 16:15
Apr 12, 2024 - 16:36
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு

நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்க.  

அலுவலகம் சார்ந்த பணிகள்ல, உடன் வரும் யாரிடமும் பணி சார்ந்த ரகசியங்களைப் பகிர வேண்டாம்க. திட்டமிட்டு செயல்பட்டா எதிர்காலம் தித்திக்கும்க.
குடும்பத்துல நிம்மதிப் பூ மலரும்க. தடைப்பட்ட சுபகாரியங்கள் சுலபமா கைகூடும்க. வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம்க. உறவுகள் யாரையும் உதாசீனப்படுத்தறதும் கூடாதுங்க. சுப செலவுகள் அதிகரிக்கும்க. வீடு, மனை வாங்கும் முன் உரிய தஸ்தாவேஜுகள்ல முழுகவனம் செலுத்துங்க. கடன்களை ஆடம்பரத்துக்காக வாங்க வேண்டாம்க. விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தருவதோ பெறுவதோ கூடாதுங்க.

சொந்தத் தொழில்ல முழு ஈடுபாடு இருந்தா, சீரான லாபம் பெறலாம்க. வர்த்தகக் கடன்களை அவசியமில்லாம வாங்க வேண்டாம்க. முதலீடுகள் எதையும் நேரடி கவனத்தோட செய்யுங்க. அயல்நாட்டுத் தொழில்கள்ல வளர்ச்சி அதிகரிக்கும்க. ஒப்பந்தங்கள் எதையும் அவசரத்திலும் மீறவேண்டாம்க.
அரசு, அரசியல் சார்ந்தவங்க எந்த விஷயத்திலும் மேலிடத்து அனுமதியை அவசியம் பெறணும்க. யாரோட கட்டாயத்துக்காகவும் இருக்கும் இடத்தைவிட்டு பறக்கும் இடத்தை பிடிக்க அடி எடுத்து வைக்க வேண்டாம்க. சஞ்சலத்தையும் சபலத்தையும் அறவே தவிருங்க.

மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் நிச்சயம் உயரும்க. உயர்கல்வி வாய்ப்புகள் உங்க மனம்போல கிட்டும்க. கல்வி உதவித்தொகை, வங்கிக் கடன்கள் தாமதமின்றிக் கிடைக்கும்க. மூன்றாம் நபர் பேச்சை நம்பி குறுக்குவழியில் முயற்சிக்க வேண்டாம்க.

கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வரும் சமயத்துல பழைய பெருமையைப் பேசி, புதிய வாய்ப்புகளை நழுவவிட்டுட வேண்டாம்க. பணிவுதான் துணிவைவிட நல்லதுங்க.

இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. உடன் வரும் பிறர் தரும் உணவு, பானங்களைத் தவிருங்க. பற்கள், மூட்டு, கழுத்து, ஒற்றைத் தலைவலி, சளி உபாதகள் வரலாம்க. பெண்கள் மாதாந்தர உபாதை காலத்துல கவனமா இருங்க. ஆண்டு முழுக்க ஆனைமுகனைக் கும்பிடுங்க. ஆனந்தம் அதிகரிக்கும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow