மாஸ்கோ தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதலுக்கும் தொடர்பு?

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பஷ்தூன் ஆர்வலர்  குற்றம்சாட்டியுள்ளார். 

Mar 27, 2024 - 11:27
மாஸ்கோ தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதலுக்கும் தொடர்பு?

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் கடந்த 22-ம் தேதி பிக்னிக் என்ற ராக் இசைக்குழுவின் கச்சேரிக்காக அங்கு சுமார் 7,500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அரங்குக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 143 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை உக்ரைன் எல்லையில் வைத்து ரஷ்யா பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.  இதனைதொடர்ந்து இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதேபோல் பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலை படைத்தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தசு என்ற இடத்தில் சீன நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்த இரு தாக்குதலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பஷ்தூன் தகஃபூஸ் இயக்கத்தின் உறுப்பினரான பசல் அர் ரகுமான் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.  பாகிஸ்தான் மட்டுமின்றி மொத்த உலகமும் ஆபத்தில் இருப்பதாகவும், பாகிஸ்தான் இராணுவத்தின் பினாமிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும், பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow