மக்கள் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை என மக்கள் குற்றச்சாட்டு-அண்ணாமலை பேட்டி
நிவரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல ஆவண செய்யப்படும்
![மக்கள் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை என மக்கள் குற்றச்சாட்டு-அண்ணாமலை பேட்டி](https://kumudam.com/uploads/images/202312/image_870x_658293c0233f7.jpg)
3 நாட்கள் ஆகியும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை என மக்கள் குற்றச்சாட்டுவதாக நெல்லையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகாில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பாா்வையிட வந்த பாஜக மாநில தலைவா் அண்ணாமலை நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், குறுக்குத்துறை, சீ.என். கிராமம் பகுதிகளில் மக்களிடம் வெள்ளம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தாா். ராஜ் மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட பாஜக சாா்பில் உதவிகளை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அண்ணாமலை, “ நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாி ஆகிய 4 மாவட்ட வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை தமிழக முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் இங்கு வந்து நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
தென் தமிழகத்தில் 4 மாவட்டத்தில் பாதிப்புகளுக்கு மத்திய அரசு தனது முழு அதிகாரத்தை செயல்பாட்டை பயன்படுத்தி இருக்கிறது.தற்போது வரை ஐந்து ஹெலிகாப்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ரயிலில் இருந்து பயணிகளை மீட்கவும் உணவு வழங்கவும் பயன்படுத்தி உள்ளது. 7 என்டிஆர் கடலோர காவல்படை இரண்டு இந்திய ராணுவம் என மொத்தம் 17 மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சகம் 24 மணி நேரமும் கண்காணிக்கிறது. மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்து வருகிறது.ஆனால் மக்கள் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி முதலமைச்சர் எங்கே?
முதலமைச்சர் இருக்க வேண்டியது தென் தமிழகத்தில்.ஆனால், முதல்வர் இந்தியா கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார். ஒரு ஒப்புக்காக பிரதமரிடம் நேரம் கேட்கிறார்கள். ஒரு முதல்வர் கையாளக்கூடிய விஷயம் இது இல்லை. களத்திலிருந்து அதிகாரிகள் அமைச்சர்களை முடுக்கிவிட வேண்டும். மூன்று நாட்களாக மக்கள் பிரதிநிதிகள், கவுன்சிலர், அதிகாரிகள் யாரும் வரவில்லை என இங்குள்ள மக்கள் குற்றச்சாட்டுகின்றனா்.
தாமிரபரணி ஆற்று கரையோரம் எதிர்பார்க்காத சேதம். வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களையும் இழந்துள்ளனர். ஏழை மக்களின் 10 ஆண்டுகள் உழைப்பு இரண்டு நாட்களில் பறிக்கொடுத்துள்ளனர்.மிளா துயரமாக உள்ளது.
வெள்ள நிவாரணமாக சென்னையில் 6,000 கொடுத்தார்கள்.அது மாநில பேரிடர் நிதியிலிருந்து 6000 கொடுக்கப்படுகிறது.அதில் 75% மத்திய அரசின் 25% மாநில அரசு. கவர் மட்டும் தான் திமுக பணம். மத்திய அரசுக்கு சொந்தமானது. நிவாரணத்தொகை கொடுக்கும் கவரில் அவ்வளவு பெரிய படம் போடுகிறார்கள்.ஆனால் மாநில அரசு -மத்திய அரசசை கணக்கிடாமல் மறைத்து பேசுகிறார்கள்.
வீடுகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் என தனித்தனியே மத்திய அரசின் படி ஒரு கணக்கீடு உண்டு. மாநில அரசு சேத மதிப்பிற்கு அறிக்கை கொடுக்கும். மத்திய அரசு கணக்கீடு அடிப்படையில் கண்டிப்பாக நிவாரணம் கொடுக்கும். உதயநிதி வர காரணம் என்ன?. உதயநிதிக்கு சினிமாவை தவிர வேறு என்ன அனுபவம் உண்டா?. இயக்குநரை அழைத்து வந்து நிற்கிறார். அதிகாரமும், அனுபவமும் ஒன்று சேர்ந்து இருக்கவேண்டும் என நாங்கள் கூறுகின்றோம். துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சா்கள் களத்தில் இருந்தால் அவா்களது அனுபவம் நிவாரண உதவிகளுக்கு உறுதுனையாய் இருக்கும்.
கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் சற்று தாமதமாகவே அறிவித்தது என முதலமைச்சா் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் குற்றம் சாட்டி இருந்தாா். அதற்கு 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூப்பர் கம்ப்யூட்டர் வானிலை ஆய்வு மையத்திற்கு நீங்கள் தான் கொடுத்தீர்கள். இந்த கம்ப்யூட்டர் எங்கே போச்சு என வினாவினாா்.
மேலும் ரெட் அலா்ட் என அறிவிப்பு வந்தது. ஆனால் யாராலும் மழை பொழிவை கணக்கிடமுடியாது என்றாா்.தூத்துக்குடி, நெல்லை நான்கு வழிச்சாலை கடந்த 3 தினங்களாக வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. அவசரம் கருதி தொியாமல் காாில் வரும் நபா்களுக்கு தூத்துக்குடி டோல் பிளாசாவில் கட்டணம் கழிகின்றது. நெல்லை செல்ல முடியாமல் மீண்டும் திரும்பி வரும்போதும் கட்டணம் எடுக்கப்படுகின்றது என்ற கேள்விக்கு இதுபற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவண செய்கிறேன் என்றாா்.மேலும் நிவரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு டோல் கட்டணம் இல்லாமல் இலவசமாக செல்ல ஆவண செய்யப்படும் என்றாா்.
What's Your Reaction?
![like](https://kumudam.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudam.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudam.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudam.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudam.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudam.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudam.com/assets/img/reactions/wow.png)