11.85 லட்சம் பேருக்கு விரைவில் கலைஞர் உரிமைத்தொகை: தொகை
விரைவில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உள்ளது
கலைஞர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு விரைவில் தொகை வழங்கப்பட உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி, புளியம்பட்டி, தொப்பம்பட்டி, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துக்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை கரும்பு, 1000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கலைஞர் உரிமைத்தொகை ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்கி வருகிறது. அதன் பின்னர் விண்ணப்பித்த ஏழு லட்சத்து 20 ஆயிரம் பேர் கலைஞர் உரிமைத்தொகை மாதந்தோறும் பெற்று வருகின்றனர். அதன் பின்னர் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு விரைவில் தகுதியுள்ள அவர்களுக்கு வழங்குவதற்காக 8 தாசில்தார் 101 துணை தாசில்தார்களை முதலமைச்சர் நியமித்துள்ளார்.
இதன் மூலம் விரைவில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணி ராமராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?