Mamitha Baiju: “மமிதா பைஜூ எனக்கு அந்த மாதிரி தான்..” பிரேமலு நடிகர் அமல் டேவிஸ் ஓபன்!

மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தின் நாயகி மமிதா பைஜூ பற்றி நடிகர் அமல் டேவிஸ் மனம் திறந்துள்ளது வைரலாகி வருகிறது.

May 9, 2024 - 17:24
Mamitha Baiju: “மமிதா பைஜூ எனக்கு அந்த மாதிரி தான்..” பிரேமலு நடிகர் அமல் டேவிஸ் ஓபன்!

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் 200 கோடி வரை வசூலித்தது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு இருந்ததால், டப்பிங் செய்யப்பட்டன. அதேபோல், ஓடிடியில் வெளியான போதும் ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. நஸ்லென் கே கஃபூர், சங்கீத் பிரதாப், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை கிரிஷ் இயக்கியிருந்தார். 

2கே கிட்ஸ்களின் காதல் கதையை ஃபேண்டஸியாக இயக்கியிருந்தார் கிரிஷ். எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தது நாயகி மமிதா பைஜூ தான். அவரது க்யூட்டான ரியாக்‌ஷன்ஸ், ஆக்டிங் என அனைத்தும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் பிரேமலு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள், சக்சஸ் மீட், மேக்கிங் வீடியோ போன்றவற்றில் மமிதா பைஜூ செய்த அட்ராசிட்டிகளும் வைரலாகின.

அதில், மமிதாவும் அமல் டேவிஸ் கேரக்டரில் நடித்த சங்கீத் பிரதாப்பும் நெருக்கமாக பேசிக்கொண்டது, குறும்புத்தனத்துடன் விளையாடியது, டான்ஸ் ஆடியது அனைத்தும் ரீல்ஸ் வீடியோக்களாக வலம் வந்தன. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரேமலு படத்தில் ரியல் ஹீரோவாக நடித்த நஸ்லென் கஃபூரை சங்கீத் பிரதாப் ஓவர் டேக் செய்துவிட்டதாக கமெண்ட்ஸ் அடித்தனர். அதாவது பிரேமலு படத்தில் ஹீரோவுக்கும் மமிதா பைஜூவுக்கும் காதலில் உதவி செய்யும் கேரக்டரில் நடித்திருந்தார் சங்கீத் பிரதாப். ஆனால் நிஜத்தில் மமிதாவின் ஹீரோ சங்கீத் பிரதாப் தான் எனக் கூறி வந்தனர். 

அதுமட்டும் இல்லாமல் பிரேமலு கிளைமேக்ஸில் ஹீரோ லண்டன் சென்றுவிடுவதால், இரண்டாம் பாகத்தில் மமிதா – அமல் டேவிஸ் அட்ராசிட்டி இன்னும் அதகளமாக இருக்கும் எனவும் கமெண்ட்ஸ் செய்தனர். இந்நிலையில் இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார் அமல் டேவிஸ் கேரக்டரில் நடித்த சங்கீத் பிரதாப். அதில், அவரும் மமிதாவும் காதலிப்பதாக வைரலான மீம்ஸ்களை பார்த்தேன் எனக் கூறிய சங்கீத், உண்மையில் எங்களுக்கு இடையே காதல் என எதுவும் இல்லை என்றார். மமிதா தனக்கு சொந்த தங்கையை போல தான் எனவும், படப்பிடிப்பில் ஜாலியாக பழகியதால் அது வைரலாகிவிட்டது என்றும் மனம் திறந்துள்ளார். சங்கீத் பிரதாப்பின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow