AI music: தாய்ப்பாலும் பாக்கெட் பாலும் ஒன்றா? இசையமைப்பாளர் sam cs ஓபன் டாக்

தென்னிந்திய சினிமா, பாலிவுட் என பரபரப்பாக இயங்கி வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் குமுதம் இதழுக்காக அளித்த சிறப்பு நேர்க்காணலில் இசைத்துறையில் ஏ.ஐ (AI) தொழில்நுட்ப பயன்பாடு குறித்த தனது கருத்தினை என தெரிவித்துள்ளார்.

Apr 3, 2025 - 12:59
AI music: தாய்ப்பாலும் பாக்கெட் பாலும் ஒன்றா? இசையமைப்பாளர் sam cs ஓபன் டாக்
sam cs thoughts about ai music

விக்ரம் வேதா, கைதி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பிரியத்திற்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சி.எஸ் காட்டில் தற்போது அடைமழை பெய்கிறது எனலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பம்பரமாக சுற்றி வருகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் குமுதம் இதழுக்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பிரத்யேக நேர்க்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன் இரண்டாம் பகுதி விவரங்கள் பின்வருமாறு-

90-கள்ல வந்த பாடல்கள் மாதிரி இப்போ பாடல்கள் ஹிட் ஆகாதது ஏன்?

ஒரு டைம்ல சூப்பரா எழுதுவாங்க.. ஒரு டைம்ல மொக்கையா வரும். வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் இல்லாம வேற மாதிரி போகும். திரும்ப மாறும் எல்லாமே ஒரு சுழற்சிதான். நான் பாடலாசிரியர் ஆகணும்னுதான் ஃபீல்டுக்கே வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் 90-கள்ல இருந்து 2007 வரைக்கும் பாடல்களுக்கு கோல்டன் டைம். பாடல்கள் சூப்பரா இருக்கும். வரிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். எல்லா பாடல்களுமே வேற லெவல்ல இருக்கும்.

'கன்னத்தில் முத்தமிட்டால் 'பம்பாய்', '7ஜி ரெயின்போ காலனி', 'வல்லவன்'னு லிஸ்ட் போட்டுட்டே போகலாம். வைரமுத்து-ரஹ்மான் காம்பி னேஷன், யுவன்-நா.முத்துக்குமார் காம்பினேஷன்லாம் செமயா இருக்கும். கடந்த 10 வருஷங்கள்ல செம பாட்டுனு எதைச் சொல்வீங்க? ஒரு பாட்டுகூட இல்லை.

இப்போ ஏன் அந்தப் பாடல்கள் மிஸ் ஆகுது?

"நான் ஒரு பாட்டு பண்றேன். டான்ஸ் ஆடும்போது பிட்தானே முக்கியம். பாட்டு ஏதோ ஒண்ணு வந்துட்டுப் போகுதுங்கிற மன நிலையில சிலர் கேட்கும்போது நான் என்ன பண்ண முடியும்? இங்கே நிறைய பிரச்னைகள் இருக்கு. நான் போர்டு மாதிரி ஒரு கருவிதான். மியூசிக் டைரக்டர்ங்கிற கருவிகிட்ட இருந்து எப்படி வேணுமோ அதை இயக்குநர்கள் வாங்கிக்குறாங்க. எது தேவையோ அதைக் கொடுக்கிறதுதான் இப்போ சினிமா மியூசிக்.

ஏ.ஐ.டெக்னாலஜியினால் இசைத்துறைக்கு பாதிப்பு வருமா?

'ஏ-ஐ. டெக்னாலஜி வந்த பிறகு, ஒரு பாட்டு எப்படி வரும்னு காட்டச் சொல்றாங்க அதனால் ஒரு பாட்டை ஹார்மோனியத்துலயோ அல்லது ட்யூனாவோ பாடிக் கொடுக்கலைன்னா அவங்களால் ஜட்ஜ் பண்ண முடியாது. அதனால என்ன வரும். ஃபைனல் அவுட் எப்படி வரும்னு தெரியாது. நான் என்ன பண்ணுவேன்னா, ஒரு லிரிக் எழுதி, டம்மியா பாடி மியூசிக் பண்ணுவேன். ஏ.ஐ-ல பார்த்தோம்னா வயலின் வாசிக்கலாம். நாம பாட்டு பாடி வயலினா கன்வெர்ட் பண்ணிக்கலாம். ஆனா, அதுல ஜீவன் இருக்காது. ஜீவன் நாம பாடியதில்தான் இருக்கும். ரொம்ப மெஷினரியா போய்ட்டு வரும்போது அதற்கான உணர்வு மொத்தமா மிஸ் ஆகிடும்.

எல்லோருமே இப்போ ஏ.ஐ. ஃபியூச்சர், வெற லெவல்ல இருக்கப்போகுது, சொன்னாலே பாட்டு வந்துடும்னு சொல்றாங்க. பாட்டு வந்துடும். ஆனா, அதைப் புரிய வைக்க முடியாது. தாய்ப் பாலுடன் பாக்கெட் பாலை கம்பேர் பண்ண முடியுமா? ஏ.ஐ.யால் இசைத்துறைக்கு பாதிப்பு வராது."

உங்களின் அடுத்தடுத்த லைன் அப்?

"மாதவன் சார் இயக்கும் இந்திப் படம், 'மகா அவதார்' உள்ளிட்ட 3 இந்திப் படங்கள் பண்றேன். தெலுங்கு மலையாளப் படங்களின் லிஸ்ட்டும், தமிழ்ப் படங்களின் லிஸ்ட்டும் கொஞ்சம் பெருசு. 'புஷ்பா 2'வைத் தொடர்ந்து 'புஷ்பா 3' படத்துலயும் நான் இருப்பேன். என்னை மியூசிக் ஃபேக்டரின்னுகூட சொல்வாங்க இசைக்குதான் என் எல்லா நேரத்தையும் இன்வெஸ்ட் பண்றேன். என்னைக்காச்சும் ஹாலிவுட் படம் பண்ணிடணும்னு இருக்கேன். அதற்கான பேச்சு வார்த்தைகள் போய்க்கிட்டு இருக்கு" என பதிலளித்துள்ளார்.

Read more: ராஜா சார்ட போய் நான் யாருனு சொல்லுறது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஓபன் டாக்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow