Mari Selvaraj: துருவ் விக்ரம்–மாரி செல்வராஜ் கூட்டணியில் மல்லுவுட் ஹீரோயின்... கைகொடுத்த பா ரஞ்சித்
மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அவரது 5வது படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மலையாள பிரபலம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் துருவ் விக்ரம். முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் பயோ-பிக்காக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாரி செல்வராஜ்ஜின் 5வது படமான இதன் டைட்டில் இன்னும் அறிவிக்கவில்லை. அதேநேரம் துருவ் விக்ரம் கபடி பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். முக்கியமாக மணத்தி கணேசனே துருவ் விக்ரமிற்கு கபடி பயிற்சி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவரும் திருச்செந்தூர் அருகேயுள்ள மணத்தியில் முகாமிட்டுள்ளார்.
இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல், துருவ் விக்ரம் ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பதும் புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக மல்லுவுட் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். அதேபோல் இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டியோஸ், அப்ளாஸ் நிறுவனம் இணைந்து தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது.
மாரி செல்வராஜ்ஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது. அதன்பின்னர் மீண்டும் மாரி செல்வராஜ்ஜின் 5வது படத்தை தயாரிக்கிறார் பா ரஞ்சித். இதனையடுத்து இக்கூட்டணியை உறுதி செய்யும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ், அனுபமா பரமேஸ்வரன், பா ரஞ்சித், அப்ளாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனையடுத்து விரைவில் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், அடுத்து வாழை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் துருவ் விக்ரம் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் மாரி செல்வராஜ்.
What's Your Reaction?