கதற கதற ப்ளாக்பஸ்டர்: 10 நாளில் 100 கோடி வசூலித்து அசத்திய டிராகன்!
அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் கடந்த பிப்.,21 ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் டிராகன். தெலுங்கில் “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்” என்கிற பெயரில் வெளியானது.

இயக்குனரும், நடிகருமான ப்ரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் 10 நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் தற்போதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 100 கோடி வசூலினைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்த அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் கடந்த பிப்.,21 ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் டிராகன். தெலுங்கில் “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்” என்கிற பெயரில் வெளியானது.
டிராகனுக்கு அடித்த ஜாக்பாட்:
படத்தின் நாயகனாக இயக்குனரும், நடிகருமான ப்ரதீப் ரங்கநாதன் நடித்திருந்தார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில், லியோன் இசையமைத்து இருந்தார். படத்தினை Ags எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது.
டிரைலருக்கு கலவையான விமர்சனம் வெளியாகிய நிலையில், படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததாக அமைந்தது. டிராகனுடன் தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” பெரிதாக பேசப்படாத நிலையில் டிராகனுக்கு அடித்தது ஜாக்பாட் என்றே சொல்லலாம். திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெருகிய நிலையில் 10 நாட்களில் 100 கோடியினை வசூலித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது டிராகன்.
மகேஷ் பாபு வாழ்த்துவார்: இயக்குனர் நம்பிக்கை
100 கோடி வசூலினைத் தொடர்ந்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. அப்போது ப்ரதீப் ரங்கநாதன் கூறுகையில், “தன்னை தெலுங்கு சினிமாவின் வளர்ப்பு மகன்" என்று குறிப்பிடும் வகையிலான மீம்ஸ்களை கண்டேன். தெலுங்கு திரைப்படத் துறையின் ஒரு பகுதியாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. நீங்கள் கொடுக்கும் அன்பிற்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கூறினார்.
இயக்குனர் அஸ்வத் பேசுகையில், “எனது முந்தைய படத்தினை மகேஷ் பாபு பார்த்து பாராட்டி ட்வீட் ஒன்றினை போட்டு இருந்தார். அது எப்போதும் எனக்கு நல்ல நினைவுகளில் ஒன்றாகும். தற்போது நான் இயக்கியுள்ள ரிட்டர்ன் ஆஃப் தி டிராகனைப் பார்த்து அவர் ட்வீட் செய்வார் என்கிற நம்பிக்கை என்னிடத்தில் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
முன்னதாக ப்ரதீப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டூடே திரைப்படமும் தமிழ், தெலுங்கில் ப்ளாக்பஸ்டர் அடித்து 100 கோடி வசூல் சாதனை படைத்தது. தற்போது டிராகன் மூலம் இரண்டாவது முறையாக 100 கோடி வசூலித்து அசத்தியுள்ளார் ப்ரதீப். அடுத்ததாக இவரின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” படம் தயாராகி வருகிறது. டிராகன் படத்தினை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவுடன் கைக்கோர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
xiaomi 15 ultra: புதிய போன் மாடலுக்கு இந்தியாவில் என்ன விலை? அப்படி என்ன வசதி இருக்கு?
World Wildlife Day: நிதி இல்லாமல் வனவிலங்கு பாதுகாப்பு எப்படி சாத்தியம்?
What's Your Reaction?






