அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரனமாக ஆகிவிடும்.

Dec 19, 2023 - 12:44
Dec 19, 2023 - 17:09
அமைச்சர் பொன்முடியின் விடுதலையை  ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் டிச.21ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2006 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுவித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணையில் உள்ளது.  

அப்போது,லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களையும், 39 சாட்சிகளை விசாரித்ததாகக் குறிப்பிட்டப்பட்டது.

பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளது. மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை கூறப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி மனைவி பெயரில் தவறான சொத்து சேர்த்தது நிரூபணமாகிறது. வரிமான வரி ஆவணங்கள் நிரூபிக்கவில்லை என வழக்கு ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது. 

அவ்வாறு விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரனமாக ஆகிவிடும். அதனால், விழுப்புரம் நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது. கீழமை நீதிமன்றம் வங்கி கணக்கு ஆவணங்களை முழுமையாக பார்க்க தவறிவிட்டது. 64 சதவிகிதம் சொத்து சேர்த்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பொன்முடி வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. டிச.21ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரிடுயாகவோ? காணொலி காட்சு மூலமாகவோ? நேரில் ஆஜராக வேண்டும். தண்டனை விவரங்கள் அன்று அறிவிக்கப்படும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow