Russia: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்... நேரில் சென்று பார்வையிடாத புதின்...! உக்ரைனை குற்றம்சாட்டுவது ஏன்.?

ரஷ்யாவின் புலனாய்வு குழு உக்ரைனுக்கும் இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் தொடர்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

Mar 26, 2024 - 10:07
Mar 26, 2024 - 10:12
Russia: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்... நேரில் சென்று பார்வையிடாத புதின்...! உக்ரைனை குற்றம்சாட்டுவது ஏன்.?

உலகையே உலுக்கிய மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், உக்ரைனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் க்ரோகஸ் அரங்கில் பிக்னிக் என்ற இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்த நிலையில், எதிர்பாரத விதமாக, உள்ளே புகுந்த பயங்கரவாதிகள் கண் இமைக்கும் நொடியில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 137 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து ஈரானில் இருந்து செயல்படும் ஐஎஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. இதையடுத்து உலகநாட்டு தலைவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவிட்டனர். 

இச்சம்பவத்தை அடுத்து பேசிய, ரஷ்ய அதிபர் புதின் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார். அத்துடன் இந்த தாக்குதலால் உக்ரைன் ஆதாயம் பெறும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில் சம்பவம் நடந்த 2 நாட்களில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
இதனிடேயே தாக்குதல் நடந்து 4 நாட்கள் கடந்தும், ரஷ்ய அதிபர் புதின் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிடாது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேவேளையில், சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என உக்ரைன் திட்டவட்டமாக கூறியநிலையில், ரஷ்யாவின் புலனாய்வு குழு உக்ரைனுக்கும் இந்த பயங்கரவாதத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் தொடர்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதனால் பயங்கரவாத சம்பவத்தில் உக்ரைன் மறுத்த குற்றச்சாட்டு தொடர்பாக  மர்மம் நீடித்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow