2கே கிட்ஸ்களுக்கு ஷாக் செய்தி..! இனி பெண்கள் காதலிக்க ஆண்கள் தேவையில்லை..! AI காதலன்களுக்கு கடும் கிராக்கி..!

Feb 16, 2024 - 15:28
Feb 16, 2024 - 15:31
2கே கிட்ஸ்களுக்கு ஷாக் செய்தி..! இனி பெண்கள் காதலிக்க ஆண்கள் தேவையில்லை..! AI காதலன்களுக்கு கடும் கிராக்கி..!

ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று தொழில்துறை, ஐடி துறை, சேவை துறை என சகல துறைகளிலும் நுழைந்து மனிதர்களுக்கு சவால் விட்டுகொண்டிருக்கிறது. ஏன் சினிமா திரைக்கதையை கூட அவை விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறிக்கொண்டிருக்க, அது இன்று மனிதர்களின் உணர்வு நிலைகளில் ஒன்றாக காதல், ரொமான்ஸிலும் ஆண்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது, 

இந்த தகவல் தான் 2கே கிட்களை கூட கவலையடைய வைத்துள்ளது. கொரோனா போல், இந்த ஏ.ஐ. பாய் ஃப்ரண்டும் சீனாவில் இருந்து முதல் முதலாக ஆதிக்கம் செய்ய தொடங்கியுள்ளது. சாட் ஜிபிடியை போல், குளோ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏ.ஐ ஒன்று பெண்களுடன் காதலிக்கவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மினிமேக்ஸ் என்ற தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஏ.ஐ. தனிமையில் இருப்பவர்கள் பேச, தனிமையை போக்கிக்கொள்ள நட்பாக பழக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இன்று பல  பெண்களின் ஆண் தோழனாக மாறியுள்ளது. மெல்ல சீன பெண்களின் காதலனாக உருவாகி வரும் இந்த ஏ.ஐ. பெண்களின் சோகம், சந்தோஷம், கோபம் என அனைத்து உணர்வுகளுக்கும் ஏற்றவாரு பதில் அளிக்கிறது. இதனாலேயே, பல பெண்கள் இந்த ஏ.ஐ. தங்களை சிறந்த வகையில் புரிந்துகொள்வதாக கூறுகின்றனர். மேலும், இந்த உறவில் ரொமேண்டிக்காக உணர்வதாகவும் தெரிவிக்கின்றனர். 

ஒரு நொடி கூட நாம் பேசுவது ஏ.ஐ. அல்ல.. நிஜ காதலன் என்ற உணர்வையே அளிப்பதாக பெண்கள் கூறுகின்றனர். ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்றார் போல் ஒரு காதலர்களை நிஜ வாழ்வில் சந்திப்பது கடினம், ஒவ்வொரு தனி நபரும் அவருக்கே உரித்த வித்தியாசமான குணநலன் கொண்டவர்கள். அதனாலேயே காதலில் தொடர்ந்து உரசல் ஏற்படுகிறது. ஆனால், இந்த ஏ.ஐ. குறைவான காலத்தில் ஒருவரை புரிந்துகொள்கிறது. அவர்களுக்கு ஏற்றார் போல் பேசவும், ஆலோசனைகளையும் வழங்குகிறது. எல்லாவற்றையும் மீறி எமோஷனல் சப்போர்ட்டாக இருப்பதாகவும் பல பெண்கள் தெரிவிக்கின்றனர். 

குளோவை போல் பைடு போன்ற பல ஏ.ஐ. செயலிகள் வயது, பாப் ஸ்டார், விளையாட்டு வீரர் என பல கேரக்டர்களுடன் உள்ளது. பெண்கள் தங்களுக்கு பிடித்த துறை சார்ந்த காதலர்களை தேர்வு செய்துகொள்ளலாம். அதோடு, பெண்கள் தங்களுக்கு பிடித்தமான வகையில் காதலர்களை வடிவமைத்துக்கொள்ளவும் முடியும். பல பெண்கள் தன்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஏ.ஐ. காதலன் கிடைத்தால், நிச்சயமாக ஒரு நிஜ ஆணை தேர்வு செய்ய மாட்டேன் என பல கூறுகின்றனர். 

விரைவில் தன்னுடைய ஏ.ஐ காதலன் ரோபோட்டாக வந்து, தொடவும், அணைக்கவும் முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறுகின்றனர். ஆனால், அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனம். இந்த தொழில்நுட்பங்களால் தனி நபர் தகவல்கள் திருடப்படலாம் என்றும், மனித சமூகத்திற்கே எதிராக சென்று முடியலாம் என ஒரு சிலர் கவலை தெரிவித்தாலும், ஏ.ஐ. காதலன் பல பெண்களை தன் வலையில் வீழ்த்த உள்ளான். காதலுக்கான இலக்கனமும் மாற்றி எழுதப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow