"என் மண்.. என் மக்கள் நடைபயணம் வெற்றி" - அண்ணாமலை நன்றி...!

Feb 28, 2024 - 11:08
"என் மண்.. என் மக்கள் நடைபயணம் வெற்றி" - அண்ணாமலை நன்றி...!

என் மண்.. என் மக்கள் நடைபயணம் நிறைவு விழா நேற்று(27.02.2024) நடைபெற்ற நிலையில், இப்பயணத்தை வெற்றிக்கரமாய் முடிப்பதற்கு உதவிய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பயணத்தின் கீழ் கடந்த 7 மாதங்களாக தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் பயணம் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலையும், ஒரு குடும்பத்தையும், அடாவடித்தனத்தையும், லஞ்ச லாவண்யத்தையும் மட்டுமே முன்னிறுத்திய தமிழக அரசியலில், பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேர்மையான, சாமானிய மக்களுக்கான அரசியல் சாத்தியம் என்பதை நமது பாரதப் பிரதமரின் பத்தாண்டு கால நல்லாட்சி நிரூபித்திருப்பதாக கூறியுள்ளார். 

இந்த 7 மாதப் பயணத்தில், திமுக அரசால் பல தடைகளை எதிர்கொண்டதாகவும்,பழிவாங்கும் நோக்கத்தோடு, பாஜக நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டதாகவும், வீண் பழிகள் சுமத்தப்பட்டு, கைது நடவடிக்கைகளை எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி மீது மக்களுக்கும், நமது கட்சி சகோதர, சகோதரிகளும் கொண்டுள்ள பேரன்பை எவராலும் தடுக்கவோ, மறைக்கவோ முடியாது என்பதை திமுக விதித்த அத்தனை தடைக்கற்களையும் உடைத்தெறிந்து நடைபயண நிறைவு விழாவில், பிரதமர் நமது பயணத்தின் வெற்றியை நேரில் அர்ப்பணித்து நிரூபித்து இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். 

சரியான திட்டமிடல், முறையான தகவல் பரிமாற்றம், தெளிவான ஒருங்கிணைப்பு என ஒரு மகத்தான சாதனை பயணத்தை, நமது பாஜக சகோதர, சகோதரிகள் சாத்தியமாக்கி இருப்பதாகவும், கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தங்கள் சுக, துக்கங்களை மறந்து இந்தப் பயணத்திற்காக செயல்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நன்றி என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Sensational-Panruti-This-is-Listule-or-not...-Ex-MLA-who-is-caught-by-her-husband..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow